Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

காதலர் தின கவிதை

என்ன எழுதினாலும், உன்னுடைய“அச்சச்சோ!”
“ஊஹூம்…”
“ம்க்கும்!”
“ப்ச்..ப்ச்..”
“ஹேய்…”

…க்களுக்கு முன்னால்
என் கவிதைகள் தோற்று விடுகின்றன!


காதல் ரசம் சொட்டச் சொட்ட கவிதை எழுத எல்லாம் எனக்கு வராது.  அதெல்லாம் அருட்பெருங்கோ அழகா பண்ணுவார். அவர் எழுதினதுல ரொம்ப பிடிச்ச கவிதைல ரொம்ப பிடிச்ச வரிகள் தான் மேல. முழு கவிதை இங்க இருக்கு.

Posted in Labels: , | 0 comments

தமிழ் சினிமா இனி மெல்லச் சாகும்?

வெயில், பருத்தி வீரன், கல்லூரி இந்த மாதிரி நல்ல படம் எல்லாம் எடுக்கும் போது என்னடா இப்படி ஒரு தலைப்புன்னு கேக்கறீங்களா? இத பாருங்க. embed செய்ய இஷ்டம் இல்ல. லிங்க் மட்டும் தான் :-)
அப்பாவி ஆறுமுகம்: ஏம்பா நம்ம எலய தலபதி கூட இப்படித்தான மொதல்ல இருந்தாரு? அவர் இப்போ ஹிட்டு ஹிட்டா குடுக்கலியா?

வாழ்வு!

பெரிசா சொல்லறதுக்கு ஒன்னும் இல்ல. வெறும் பெருமூச்சு தான் :-(

Posted in Labels: , , | 0 comments

பூனை மேய்க்கறது

aஆடு மேய்க்கறது மாடு மேய்க்கறது தெரியும், பூனை மேய்க்கறது? ரொம்ப கஷ்டமான வேலைங்கோவ். நம்பலைன்னா கீழ இருக்கற வீடியோவ பார்த்து புரிஞ்சுக்கோங்க.


அப்பாவி ஆறுமுகம்: எப்படித்தான் இப்படி புதுசு புதுசா பண்ணறாங்களோ, ரூம் போட்டு யோசிப்பாங்களோ? ஹூம்ம்ம். நமக்கு வாச்சது ஆணி புடுங்கற வேலைதான்.

வண்ணங்கள்

இந்த மாசத்து புகைப்படப்போட்டிக்கான தலைப்பு 'வண்ணங்கள்'. நம்ம கலெக்சன்ல இருந்து எத அனுப்பலாம்னு எல்லாம் யோசிக்கவே வேண்டிய வேலையே இல்லாம ரெண்டு தான் தேறுச்சு. ரெண்டுமே கேரளா. மொத படம், வயனாடு போட் ஹவுஸ்ல ஒரு கடைல, ரெண்டாவது திருச்சூர் - சாலக்குடி வழில இருக்கற ஒரு சின்ன டேம்ல.









From புகைப்படப்போட்டி

ரெண்டுமே என்னோட பிலிம் கேமரால எடுத்து கொஞ்சம் iPhotoல டச்சப் செஞ்சது. வழக்கம் போல போட்டோவை கிளிக்கினால், வலது பக்கம் Download லிங்கில் பெரிய படம் கிடைக்கும்

மற்றவை:
ஆகஸ்ட் மாத போட்டிக்கான படங்கள்
ஜூலை மாத போட்டிக்கான படங்கள்

Posted in Labels: , | 2 comments

புகைப்படப்போட்டிக்காக …

நான் ஏற்கனவே இங்க சொன்ன மாதிரி, பொடுசுகள போட்டோ எடுக்கறதுங்கறது ஒரு பெரிய கலைங்க. அந்த போட்டோ எடுக்க கஷ்டப்பட்ட மாதிரி இந்த ரெண்டு போட்டோகளுக்கும் கஷ்டப்படலை. ஏன்னா கையில இருந்தது ராஜாவோட டிஜிட்டல் கேமரா :-) சும்மா ஒரு இருவது, முப்பது போட்டோ சுட்டுத்தள்ளுட்டேன். தேறினது என்னவோ இது ரெண்டும் தான்.

எடுத்ததுக்கு அப்புறம், iPhoto வெச்சு கொஞ்சம் டச் பண்ணினேன். ரெண்டுலயும், edge blur effect குடுத்து; மொத போட்டோவ கருப்பு வெள்ளைக்கு மாத்தி; ரெண்டாவதுல கொஞ்சம் color correction பண்ணினா, நான் போட்டிக்கு ரெடி. அப்ப நீங்க?



From புகைப்படப்போட்டி



வழக்கம் போல போட்டோவ கிளிக்கினால் picasa webல பெரிசா பார்க்கலாம். அங்கயே, ரைட் சைடுல டவுன்லோட் லிங்க அமுத்தினா ஒரிஜினல் சைசிலயும் வியூ பண்ணலாம். டமில் வால்க ;-)

Posted in Labels: , | 5 comments

அமெரிக்கால எல்லாம் …

நம்ம ஊருல, ரோடுல இருந்து பிட்சா வரைக்கும் எல்லாத்துக்கும் "அமெரிக்கால எல்லாம் "-ன்னு ஆரம்பிச்சு பேசுற கூட்டம் கொஞம் ஜாஸ்தி. அதுலயும் கொஞ்ச நாள் அங்க இருந்துட்டு வந்த ஆளுக அலும்பு தாங்க முடியாது. காபி குடிக்க போனாலும் செரி சத்யம் தியேட்டருக்கு போனாலும் செரி, "இதெல்லாம் என்ன மச்சி, அங்க எல்லாம் ...". இவங்க வெறும் வாய்க்கு அவல் குடுக்கற மாதிரி, நம்ம ஊரு அரசியல்வாதிங்க எல்லாம் காசு குடுத்தா, பொண்டாட்டி புள்ளைகன்னு சொல்லி ஆள் கடத்தற வேலை வேற. ஒடனே, 'ஹூம், அமெரிக்கால எல்லாம், அரசியல்வாதின்னா எவ்வளவு நேர்மையா இருக்கனும் தெரியுமான்னு' ஒரு கூட்டம் சொல்லிட்டு திரிஞ்சுது.

இந்த டயலாக்க அடிக்கடி விட்டு கடுப்படிக்கற மக்கள் எல்லாரோட ஈமெயில் ஐடி தேடி புடிச்சி இந்த லின்க நான் அனுப்பிச்சிட்டிருக்கேன். அங்க இருக்குற கருமத்த இங்க எழுத முடியாது, அதனால அங்கயே போய் படிச்சுக்கோங்க. அதோட அந்த டயலாக் உடற ஆளுங்களுக்கு எல்லாம் மறக்காம அந்த லின்க அனுபிச்சு வைங்க.

Posted in Labels: , | 0 comments

யப்பா டைரக்டருங்களா…

"ஒரு கல்லூரியின் கதை" படத்துல ரெண்டு மூணு பாட்டு நல்லா இருக்கும். எப்பவாச்சும் முனுமுனுத்துட்டு இருப்பேன். படம் பார்த்தது இல்ல. சமீபத்துல எதோ டீவீல போட்டாங்க. அம்மணி கூட உக்காந்து பார்த்துட்டு இருந்தேன். கதை என்னமோ கொஞ்சம் வித்தியாசமாத்தான் போச்சு. நடுவுல ஒரு இடத்துல, மனசுல காதல் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்க, ஹீரோயின் சத்தமே வராம உதட்ட மட்டும் அசைச்சு கூப்பிடுவாங்களாம், கூப்பிட்ட ஒடனே ரொம்ப தூரத்துல இருக்கற ஹீரோவும் கரெக்டா திரும்பி பார்ப்பாரு. எங்க அம்மணி: "நீயும் தான் இருக்கியே. லேப்டாப்ல எதயாச்சும் நோண்டிகிட்டு இருந்தா, அடுத்த ரூம்ல இருந்து காட்டு கத்து கத்துனாலும் காது கேக்காது. ஹூம். அதுக்கெல்லாம் மனசுல சுத்தமான காதல் வரணும்."

யப்பா டைரக்டருங்களா, உங்களோட கற்பனை வளத்தை பாராட்டுறேன், ஆனா இதெல்லாம் கொஞ்சம் ஓவரு.

Posted in Labels: | 0 comments

Vettaiyadu Vilaiyadu

'காக்க காக்க' மாதிரி ஒரு படம் எடுக்கலாம்னு கமல் கெளதம் கிட்ட சொல்லி இருப்பார் போல. கெளதம் கஷ்டபடாம அந்த படத்தையே கொஞ்சம் அங்க இங்க மாத்தி remake பண்ணி இருக்கார். நேர்மையான போலீஸ் அதிகாரி, நீளமான தலைமுடிய விரிச்சுப் போட்டுட்டு ஒரு வில்லன், அவர் மனைவியை கடத்திட்டு போற கிளைமாக்ஸ், etc, etc.

படத்துல சொல்லும் படியான விசயங்கள்:

கமல்: சொல்லிக்கவே வேணாம். ஒரு கம்பீரமான போலீஸ் அதிகாரி எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கார் - கொஞ்சூண்டு தொப்பையும் சேத்திதான் சொல்லறேன் ;-)

கேமரா: சும்மா பூந்து விளையாடி இருக்கார் ரவிவர்மன்.

இசை: பின்னனி இசைல கொஞ்சம் கடிய போட்டாலும் பாட்டுல பட்டய கிளப்பிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ்.

காமெடி: ஒன்னு ரெண்டு இடத்துல அங்க அங்க டயலாக்ல தூவி விட்டிருக்கறது, ரசிக்கும் படியா இருக்கு. ("மணிரத்னம் படம் மாதிரி பேசறீங்க?", "சாப்ட்வேரா? நானா?", etc)

கோட்ட விட்ட மேட்டருக:

திரைக்கதை: இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணி இருக்கலாம். முக்கியமா, "காக்க காக்க" சாயல் இல்லாம பண்ணி இருக்கலாம். அப்புறம், மொத ரேங்க் வாங்கற டாக்டர் "சாகா வரம்" பத்தி பேசறது எல்லாம் லாஜிக்கே இல்லாத விசயம்.

வன்முறை: கொஞ்சம் ஓவருங்க. கழுத்த அறுத்தா ரத்தம் கொப்புளிச்சி வரும் தான். அத அப்படியே படத்துல காட்டணுமா?

இங்கிலீஸு: நியூயார்க்ல நடக்கற விசாரணை பூரா இங்கிலீஷ் வசனம் - தமிழ் சப்-டைடில். B, C  சென்டர்ல படம் பார்க்கறவங்களுக்காக அஞ்சு நிமிசத்துக்கு ஒரு தடவ கமல் இந்தியாக்கு போன்ல update பண்ணற மாதிரி தமிழ்ல கதை சொல்லறார். எடுபடுமான்னு தெரியல.

படம் பார்த்துட்டு வெளிய வந்த ரெண்டு பேர் பேச கேட்டது:

"கமல் இண்டியன் சினிமாவோட சிங்கம்டா. சும்மா சொல்லக்கூடாது படம் சுப்பர் இல்ல?"

"ஆமா மச்சி. அடுத்ததா உங்க தலைவரு காமெடி படம் தான எடுப்பாரு?"

Posted in Labels: | 0 comments

இம்சை அரசன் 23ம் புலிகேசி

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி சன் டீவி டாப் டென்ல இந்த படம் மொதல்ல வந்ததா நியாபகம். சரி நல்ல படம் போலன்னு சீடி எடுத்துட்டு வந்துட்டேன். குழந்தைகளுக்கு பிடிச்ச காரணத்துக்காகவும், குடும்பத்தோட பார்க்கக்கூடிய காரணத்துக்காகவும் தான் தியேட்டர்ல கூட்டம் வரதா பசங்க சொன்னாங்க. ஒண்ணு, ரெண்டு தவிர மத்தது எல்லாமே கொஞ்சம் கடியான காமெடி தான்.

"ஒன்பதுஎழுத்த்து" டைட்டில், ஏழை ஹீரோ, டமில் பேசற பணக்கார ஹீரோயின், மரத்த சுத்தி ஒரு ரெயின் சாங், அம்மா தாலி வெச்சு ஒரு சுப்பர் சென்டிமெண்ட், தொப்புள்ள பனியாரம் சுடுற சீன், ஓடுற ட்ரெயின் மேல கிளைமாக்ஸ் பைட், இத்யாதி, இத்யாதி - இந்த மாதிரி ஒரு "வெற்றிப்படத்துக்கு" அத்தியாவிசயமான சமாச்சாரம் எதுவும் இல்லாம, சுத்தமான தமிழ்ல ஒரு ராஜா காலத்து காமெடி கதை எடுக்கலாம்ன்னு யோசிச்ச டைரக்டர் சிம்புவிற்கு ஒரு பெரிய சபாஷ்.

இந்த மாதிரி ஒரு படத்துக்கு, அதுவும் ஒரு அறிமுக டைரக்டர நம்பி பணம் போட்டிருக்குற சங்கருக்கு இன்னொரு பெரிய சபாஷ். (அது ஏன் சார் உங்க படத்துக்கு மட்டும் வேற தயாரிப்பாளர் கிட்ட போறீங்க?)

அடுத்த சபாஷ், படத்தோட ஹீரோ (!) வடிவேலுவுக்கு. முந்தி எல்லாம் வடிவேலு காமெடின்னாலே செனல் மாத்திடுவேன். வீர வசனம் பேசிட்டு கோவை சரளாவை கூட்டிட்டு போயி கதவ சாத்தும் போதே தெரிஞ்சு போயிடும், நம்ம வீட்டு கத தான் நடக்க போகுதுன்னு. அத டீவீல வேற பார்க்கனுமான்னு, யோசிக்காம செனல் மாத்திடுவேன். அப்புறம், வின்னர் படம் வந்து தான் அவருக்கு ஒரு பிரேக் தந்துச்சு. சும்மா சொல்லக்கூடாது, டீவீல விடுங்க, அந்த சீன நெனச்சு பார்த்தாலே சிரிச்சுடுவேன். அப்படி ஒரு காமெடியன், படம் முழுக்க ஒரு சீரியஸ் ரோல்ல நடிச்சு பேர் வாங்கறது கொஞ்சம் கஷ்டம். அதை ஒரு அளவுக்காவது பண்ணியிருக்கார். அவருக்கு ஒரு சபாஷ்.

வழக்கம் போல தன்னோட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் நாசருக்கு இன்னோரு சபாஷ்.

கொஞ்சம் நாடகத்தனம், கொஞ்சம் கடி பாடல்கள், கொஞ்சம் வெறுப்பேத்தும் காமெடி, இதை எல்லாம் தள்ளி வெச்சுட்டு பார்த்தால், மொத்தத்துல ஒரு நல்ல டைம் பாஸ்.

Posted in Labels: | 0 comments