Vettaiyadu Vilaiyadu
Posted On Aug 27, 2006 at by Prakash G.R.'காக்க காக்க' மாதிரி ஒரு படம் எடுக்கலாம்னு கமல் கெளதம் கிட்ட சொல்லி இருப்பார் போல. கெளதம் கஷ்டபடாம அந்த படத்தையே கொஞ்சம் அங்க இங்க மாத்தி remake பண்ணி இருக்கார். நேர்மையான போலீஸ் அதிகாரி, நீளமான தலைமுடிய விரிச்சுப் போட்டுட்டு ஒரு வில்லன், அவர் மனைவியை கடத்திட்டு போற கிளைமாக்ஸ், etc, etc.
படத்துல சொல்லும் படியான விசயங்கள்:
கமல்: சொல்லிக்கவே வேணாம். ஒரு கம்பீரமான போலீஸ் அதிகாரி எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கார் - கொஞ்சூண்டு தொப்பையும் சேத்திதான் சொல்லறேன் ;-)
கேமரா: சும்மா பூந்து விளையாடி இருக்கார் ரவிவர்மன்.
இசை: பின்னனி இசைல கொஞ்சம் கடிய போட்டாலும் பாட்டுல பட்டய கிளப்பிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ்.
காமெடி: ஒன்னு ரெண்டு இடத்துல அங்க அங்க டயலாக்ல தூவி விட்டிருக்கறது, ரசிக்கும் படியா இருக்கு. ("மணிரத்னம் படம் மாதிரி பேசறீங்க?", "சாப்ட்வேரா? நானா?", etc)
கோட்ட விட்ட மேட்டருக:
திரைக்கதை: இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணி இருக்கலாம். முக்கியமா, "காக்க காக்க" சாயல் இல்லாம பண்ணி இருக்கலாம். அப்புறம், மொத ரேங்க் வாங்கற டாக்டர் "சாகா வரம்" பத்தி பேசறது எல்லாம் லாஜிக்கே இல்லாத விசயம்.
வன்முறை: கொஞ்சம் ஓவருங்க. கழுத்த அறுத்தா ரத்தம் கொப்புளிச்சி வரும் தான். அத அப்படியே படத்துல காட்டணுமா?
இங்கிலீஸு: நியூயார்க்ல நடக்கற விசாரணை பூரா இங்கிலீஷ் வசனம் - தமிழ் சப்-டைடில். B, C சென்டர்ல படம் பார்க்கறவங்களுக்காக அஞ்சு நிமிசத்துக்கு ஒரு தடவ கமல் இந்தியாக்கு போன்ல update பண்ணற மாதிரி தமிழ்ல கதை சொல்லறார். எடுபடுமான்னு தெரியல.
படம் பார்த்துட்டு வெளிய வந்த ரெண்டு பேர் பேச கேட்டது:
"கமல் இண்டியன் சினிமாவோட சிங்கம்டா. சும்மா சொல்லக்கூடாது படம் சுப்பர் இல்ல?"
"ஆமா மச்சி. அடுத்ததா உங்க தலைவரு காமெடி படம் தான எடுப்பாரு?"