இம்சை அரசன் 23ம் புலிகேசி

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி சன் டீவி டாப் டென்ல இந்த படம் மொதல்ல வந்ததா நியாபகம். சரி நல்ல படம் போலன்னு சீடி எடுத்துட்டு வந்துட்டேன். குழந்தைகளுக்கு பிடிச்ச காரணத்துக்காகவும், குடும்பத்தோட பார்க்கக்கூடிய காரணத்துக்காகவும் தான் தியேட்டர்ல கூட்டம் வரதா பசங்க சொன்னாங்க. ஒண்ணு, ரெண்டு தவிர மத்தது எல்லாமே கொஞ்சம் கடியான காமெடி தான்.

"ஒன்பதுஎழுத்த்து" டைட்டில், ஏழை ஹீரோ, டமில் பேசற பணக்கார ஹீரோயின், மரத்த சுத்தி ஒரு ரெயின் சாங், அம்மா தாலி வெச்சு ஒரு சுப்பர் சென்டிமெண்ட், தொப்புள்ள பனியாரம் சுடுற சீன், ஓடுற ட்ரெயின் மேல கிளைமாக்ஸ் பைட், இத்யாதி, இத்யாதி - இந்த மாதிரி ஒரு "வெற்றிப்படத்துக்கு" அத்தியாவிசயமான சமாச்சாரம் எதுவும் இல்லாம, சுத்தமான தமிழ்ல ஒரு ராஜா காலத்து காமெடி கதை எடுக்கலாம்ன்னு யோசிச்ச டைரக்டர் சிம்புவிற்கு ஒரு பெரிய சபாஷ்.

இந்த மாதிரி ஒரு படத்துக்கு, அதுவும் ஒரு அறிமுக டைரக்டர நம்பி பணம் போட்டிருக்குற சங்கருக்கு இன்னொரு பெரிய சபாஷ். (அது ஏன் சார் உங்க படத்துக்கு மட்டும் வேற தயாரிப்பாளர் கிட்ட போறீங்க?)

அடுத்த சபாஷ், படத்தோட ஹீரோ (!) வடிவேலுவுக்கு. முந்தி எல்லாம் வடிவேலு காமெடின்னாலே செனல் மாத்திடுவேன். வீர வசனம் பேசிட்டு கோவை சரளாவை கூட்டிட்டு போயி கதவ சாத்தும் போதே தெரிஞ்சு போயிடும், நம்ம வீட்டு கத தான் நடக்க போகுதுன்னு. அத டீவீல வேற பார்க்கனுமான்னு, யோசிக்காம செனல் மாத்திடுவேன். அப்புறம், வின்னர் படம் வந்து தான் அவருக்கு ஒரு பிரேக் தந்துச்சு. சும்மா சொல்லக்கூடாது, டீவீல விடுங்க, அந்த சீன நெனச்சு பார்த்தாலே சிரிச்சுடுவேன். அப்படி ஒரு காமெடியன், படம் முழுக்க ஒரு சீரியஸ் ரோல்ல நடிச்சு பேர் வாங்கறது கொஞ்சம் கஷ்டம். அதை ஒரு அளவுக்காவது பண்ணியிருக்கார். அவருக்கு ஒரு சபாஷ்.

வழக்கம் போல தன்னோட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் நாசருக்கு இன்னோரு சபாஷ்.

கொஞ்சம் நாடகத்தனம், கொஞ்சம் கடி பாடல்கள், கொஞ்சம் வெறுப்பேத்தும் காமெடி, இதை எல்லாம் தள்ளி வெச்சுட்டு பார்த்தால், மொத்தத்துல ஒரு நல்ல டைம் பாஸ்.

Posted in Labels: |

0 comments: