சேற்றினில் மலர்ந்த செந்தாமரைகள்
Posted On Oct 11, 2006 at by Prakash G.R.இங்க இருக்கற வரிகள் எல்லாம் நான் எங்க இருந்து சுட்டேன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்:
கோபம் கொள்ளும் நேரம்
வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
கோபம் தீரும் நேரம்
மேகம் இல்லா வானம்
பெளர்னமியாய் தோன்றும் அதே நிலா
உலகத்தின் கடைசியாய்
இன்று தானோ என்பது போல்
பேசி பேசி தீர்த்த பின்னும்
எதோ ஒன்று குறையுதே.
உப்புக்கடலோடு மேகம் உற்பத்தியானாலும்
உப்புத்தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது
மலையில் விழுந்தாலும் சூரியன் மரித்து போவதில்லை
நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டித்துக்கொள்கிறதே,
மேகமாய் நானும் மாறேனோ
அதன் மேண்மை குணங்கள் காண்பேனோ
சூரியன் போலவே மாறேனோ
என் ஜோதியில் உலகை ஆளேனோ
காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் மறைவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள்மணம் மறப்பதில்லை
கருப்பு-வெள்ளை காலத்துல "அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா"-ன்னு அழகான வரிகளோட வ்ந்துகிட்டிருந்த தமிழ் சினிமா பாடல்கள் எங்கயோ போயி "எப்படி? எப்படி? நீ சமைஞ்சது எப்படி?"-ன்னு கேக்கற மாதிரி பாடல்களோட வர ஆரம்பிச்சிருச்சு. "இப்ப இருக்கற ஆளுகளே செரியில்லப்பா, எங்க காலத்துல எல்லாம்"-ன்னு ஆரம்பிக்கற பெரிசுகளுக்கு ஒரு இன்பர்மேசன்: மேல சொன்ன ரெண்டு பாடல்களையும் எழுதினது ஒரே ஆள் தான். அப்ப பார்க்கறவங்க தரம் கொறஞ்சு போச்சோ? நமீதாவோ இல்ல மும்தாஜோ வந்து ஒரு ஆட்டம் போட்டாதான் படம் ஓடுமோ? அப்படியும் இல்ல. தவமாய் தவமிருந்து கூட ஓடுதே. இந்த தமிழ் மக்களோட ரசனைய புரிஞ்சுக்கவே முடியலபா. என்னமோ போங்க.
ஸ்டேட்பாங்கில அக்கவுண்ட் இல்ல
டாஸ்மாக்கில கடன் வெச்சவன்
இந்த மாதிரி அட்டகாசமான பாட்டுகளுக்கு நடுவே நல்ல சில வரிகளும் எப்படியோ வந்துடுது. அப்படி நான் பார்த்த சில வரிகளத்தான் சுட்டு மேல குடுத்தேன். எந்தெந்த பாட்டுன்னு கேக்கறீங்களா?
- கண்ட நாள் முதலாய் - மேற்கே மேற்கே தான்
- வேட்டையாடு விளையாடு - மஞ்சள் வெய்யில் மாலை
- சாமுராய் - மூங்கில் காடுகளே
- 7ஜி ரெயின்போ காலனி - கண் பேசும் வார்த்தைகள்
முக்கியமா அந்த டாஸ்மாக் வரிகள் சொல்லாம விட்டுட்டானேன்னு திட்டுறவங்களுக்கு - ஆறு படத்தில "சோடா பாட்டில் கையில" பாட்டு
hey boy,
I hope to say you are not a teen guy. experience speaks your every word.....
May i know you personally. and may i show your face buddy.
with personal regards,
krishna
www.zazendesigns.com