From the sky ...



நேத்து போட்ட பதிவில இருந்த போட்டோவ பார்த்து கோயமுத்தூர்ல பொறந்து வளர்ந்த மக்களே கண்டுபுடிக்கமுடியல. பெங்களூரு ITPL, சென்னை Tidel எல்லாத்தையும் தூக்கி சாப்புடற மாதிரி இருக்கேன்னு நெனச்சு, எல்&டி கட்டின அப்பார்ட்மெண்ட்ல இருந்து ரேஸ் கோர்ஸ் வரைக்கும் மெயில் தட்டிவிட்டிருந்தாங்க. படத்துல அப்படியே மேல மேகோட்டு மூலைல நல்லா பாருங்க? பஸ்ஸுக எல்லாம் அப்படியே கீழ போகுதுங்களா? அது நஞ்சப்பா ரோடுங்க. மூலைல இருக்கறது காந்திபுரம் டவுன் பஸ்டாண்டுங்க. இப்ப தெரியுதுங்களா அது எந்த எடம்ன்னு? உள்ள போனா சும்மா தங்கறது மட்டுமில்லீங்க சிக்கனோட சாப்பாடும் எலவசமா கவர்மெண்ட்டே குடுப்பாங்க.

இன்னும் தெரியலையா? அட என்னங்க, நம்ம சென்ட்ரல் ஜெயில் தாங்க அது. முன்ன பின்ன அங்க போனது இல்லையோ? ;-)

சும்மா சொல்லக்கூடாதுங்க, ஏதோ ஹாலிடே ரிசார்ட் மாதிரி ஜம்முன்னு கட்டிவெச்சிருக்காங்க. எனக்கு என்னமோ ஒரு ரெண்டு வாரம் அங்க போய் தங்கிட்டு வரலாம்னு தோனுது. பிட்பாக்கெட் அடிக்கறது எப்படின்னு எங்காச்சும் கத்துக்குடுத்தா சொல்லுங்க.

கொசுறு: அந்த போட்டோ நான் எடுக்கலைங்க, உபயம் - Google Earth. அட ஆமாங்க ஆமா. இப்போ high resolutionல நம்ம ஊரு நல்லா தெரியுது!

Related Links:
From the sky (question)

Posted in Labels: , |

0 comments: