KPN Travels Vs ABT X Travels

ஊரவிட்டு ஊரு வந்து வேலை பாத்து மாசா மாசம் சம்பாதிக்கறதுல ஒரு அமெளண்ட KPNக்கு குடுக்கற கோஷ்டில நானும் ஒருத்தன். யோசிச்சு பாருங்க. ஒரு நாளைக்கு பெங்களூர்ல இருந்து மட்டும் 50 பஸ் வெளிய போகுது. சராசரியா டிக்கெட்டுக்கு 350 ரூவான்னாலும், 50 x 30 x 350 = 5,25,000 டர்ன் ஓவர் வருது. அட ஆமாங்க. சைபர் எல்லாம் சரி பாருங்க. அஞ்சே கால் லட்ச ரூவா. இது பெங்களூர் மட்டும். சென்னை, கோவை, திருநெல்வேலி, நாகர்கோயில், ... எல்லாம் கணக்கு பார்த்தா ஒரு நாள் எப்படியும் ஒரு கோடி புரளுது. இப்பயே கண்ணக்கட்டுதே, வாரம், மாசன்னு கணக்கு போட்டா? இத்தன காச வெச்சிகிட்டும் படவா பசங்க மூட்டைப்பூச்சி இருக்கற பஸ்ஸ ஓட்டுறானுக. (பொள்ளாச்சிக்கு இது ஒன்னு தான் வண்டி. வேற வழி இல்லாமத்தான் இதுல போகனும்)

அன்னிக்கு ஒரு நாள் நம்ம பிரண்டு ஒருத்தன் சொன்னான்: "மச்சி, கவுண்டரு இவனுகளுக்கு போட்டியா எறங்கிட்டாருடா, இவனுகளுக்கு இனி ஆப்புதான்". என்னடா அப்பிடி இதுல ஸ்பெசல்ன்னு கேட்டா, நீயே போய் பார்த்துக்கோன்னுட்டான். கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் சான்ஸ் கிடைச்சது. வெப்சைட்லயே புக் பண்ணிட்டேன் (லாகின் எல்லாம் வேண்டியதில்ல). மடிவாலால KPNக்கு எதுத்தாப்புலயே ஆபீசு. AC வெயிட்டிங் ரூம்!!! அடையாரு ஆனந்த பவனே, A2Bன்னு போர்டு போட்டு, கன்னட பாட்டு உள்ள பாடவிட்டிருக்கான், இங்க தமிழ் பாட்டு, தமிழ் காலண்டருல இருந்து தினத்தந்தி வரைக்கும் தமிழ் தான். அப்படியே பேச்சு குடுத்ததுல தெரிஞ்ச விசயம்: எல்லா வண்டியும் இவங்க சொந்த வண்டி தானாம்; எல்லாமே AC வண்டிக; ஒரே மாதிரி seating; வண்டில எல்லாம் ஸ்பீட் கண்ரோல் இருக்கு, 70க்கு மேல போகவே போகாது, ...

வண்டி 5 நிமிசம் லேட்டு தான். உள்ள ஏறினா கலக்கல். சீட்டுக்கு பக்கத்துல செல்போன் ஹோல்டர், சார்ஜர் போட்டுக்க ப்ளக்; லெதர் சீட்டு; எல்லாருக்கு வாட்டர் பாட்டில் (இது தெரியாம நான் வேற வாங்கிட்டு போனேன்). டிரைவர் சீட்ல இருந்து சத்தம்:

டேய், தண்ணி எல்லாருக்கு வெச்சாச்சா?
ஆச்சுன்னே
ஐபாட் குடுத்தாச்சா?
இதோ எடுத்தாறன்னே

என்னது ஐபாடா? எல்லாருக்குமா? இப்படி குடுத்தா ABT மட்டுமா, சக்தி பைனான்ஸ்ல இருந்து பன்னாரி அம்மன் சுகர் பேக்டரி வரைக்கும் இழுத்து மூட வேண்டி வருமே. செரி எது எப்படி போனா நமக்கென்ன, எந்த ஐபாட் தர போறானுக? இப்படி ஒரே கன்பீசன்ல இருந்தப்ப தான், கொண்டாந்து குடுத்தாங்க. அது iPod இல்லைங்க, eye-pad! கண்ணுக்கு கட்டிட்டு தூங்கலாம். அவ்வளவு தான். :-( கூடவே வந்த டிஸ்யூ பேப்பரு ஓவருன்னா, சீட் பெல்ட், வாந்தி எடுக்க சிக்னஸ் பேக், டீவீல 'ABT உங்களை அன்புடன் வரவேற்கிறது' எல்லாம் ஓவரோ ஓவரோ ஓவரோ ஓவர். எந்திரிச்சு போய் "இந்த ப்ளைட்ல, சாரி பஸ்ஸுல, டாய்லெட் எங்க இருக்குது?" அப்படின்னு கேக்க தோனுச்சு. அடக்கிகிட்டேன் - கேள்விய.

நண்பு சொன்னா மாதிரி, கவுண்டர் கலக்கிட்டார். ஆனா KPNக்கு ஆப்பு எல்லாம் கிடையாது. ஏன்னா, எத்தன பஸ்ஸு விட்டாலும் அதுல போற மக்கள் ஜாஸ்தி தான்.

மொத்தத்துல:
- ராத்திரில தூங்கனும். படம் போடாதீங்கப்பா
+ மத்த எல்லாமே


டெயில் பீஸ்:
அப்பாவி ஆறுமுகம்: ஏன் எல்லா மப்ஸல் பஸ்லயும் விஜய் படமே போடுறாங்க? நல்ல படமே இவங்களுக்கு கெடக்காதா?

6 comments:

  1. Anonymous Says:

    என்ன தல, KPN,ABT-ய பததி ரிவிவ்யு பண்ணுறீங்க,அப்புறம் அடுத்த் போஸ்ட்ல
    வீடு வாடகைக்குனு சொல்லுறீங்க,கலக்குறிங்க.!!
    KPN Vs ABT comprison was good...

  2. Anonymous Says:

    இனிமே ரெண்டு டிராவல்ஸ்காரங்களுக்கும் bye bye. அதான் ஊருப்பக்கம் கிளம்பறோம்ல :-)

  3. Anonymous Says:

    Even I heard many good things about ABT. Last week when I went home in a KPN, I saw a couple of people fighting with the attender for Water bottle. :-) "ABT la tharran. Unakku mattum enna?"

    BTW, how was the ride quality in ABT? They are not using Volvo.

  4. Anonymous Says:

    The ride quality is good. Although they are not using Volvo, the buses are built in the famous shops where other luxury travels build (Like prakash, Bangalore). FYI, their group owns a big coach building unit in Pollachi (AE Coaches). They are always busy with military orders, so they might have decided to outsource it.

  5. Anonymous Says:

    After hearing from Ravi me too tried the ride from MAS to CBE .Travel was good . Your write up on both travels is good. But felt difficult in reading (Poor in reading Tamil :) ).

  6. Anonymous Says:

    The KPN Was Good in Earlier Times, But we cann not access thier website also for Emergency Ticket Booking, ( Try www.kpntravels.in). You will be confused, if u entered in to thier web page. The ABT is Good, and it is the Product from DR.NM. So Keep Goinggggggggg........