தமிழ் இனி மெல்லச் சாகும்…

பெங்களூர் வலைப்பதிவர்கள் சந்திப்பு பத்தி இங்க எழுதி இருந்தேன். அதுல "என்னால ரொம்ப எல்லாம் தமிழ் பேச முடியாது" -ன்னு அறிமுகப்படுத்திகிட்ட பாரதியோட blog பக்கம் எட்டி பார்த்தேன். ஒரு நிமிசம் ஹார்ட் அட்டாக் வந்திடுச்சு. அசத்தலான குறள் வெண்பா எழுதி வெச்சிருக்காங்க. ரெண்டு சாம்பிள்:

கதவுதிறந் தோடிவந் தென்மழலை சொல்லும்
மொழியின் இனிதோ தமிழ்?


சோர்வாய் படித்து முடித்து உறங்கிடப்
போவோம் விடியும் பொழுது


இதைப்படிச்சதுக்கு அப்புறம் தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்னு கேக்கறீங்களா? தமிழுக்கு வந்த போதாத காலம், எனக்கும் குறள் வெண்பா எழுத ஆசை வந்திருச்சு. பாரதி போன ஜென்மத்துல நிறைய புண்ணியம் செஞ்சு இருக்காங்க. இல்லைன்னா என்ன மாதிரி சிஷ்யன் கிடைப்பாங்களா? ;-) கொஞ்சம் பொறுமையா பகுபத உறுப்பிலக்கணத்துல ஆரம்பிச்சு வெண்பா ரூல்ஸ் எல்லாம் சொல்லி கொடுத்தாங்க. நானும் ஏதோ கத்துகிட்டு தமிழை கொலை பண்ணப்போறேன். தமிழ் மேல அதீத பற்று இருக்கறவங்க தயவு செஞ்சு இதோட இந்த blog படிக்கறத நிறுத்திடுங்க. இதோ என்னோட மொத குறள்:

பதிவு எழுதியது போதாதென் றெண்ணி
எழுத நினைத்தேன் குறள்.

Posted in Labels: |

2 comments:

  1. Anonymous Says:

    பதிவு புதிது படித்து புகழ்ந்து
    பதித்தேன் பின் னூட்டம்

  2. Anonymous Says:

    பதிவு எழுதியதா இல்லை எழுதிய பதிவு போதாதென் றெண்ணி... எது சரின்னு எனக்கும் சரியா புரியல முடிஞ்சா விளக்கம் குடுங்களேன்.

    வாசி