வேப்பமரம், புளியமரம் ...
Posted On Jun 12, 2006 at by Prakash G.R.I recently blogged about listening to this song in Train. Prior to that whenever iTunes starts this song, I always fast forward it to the next song. No reason why I did that. I've been missing this good song for a long time!
This is the situation of the song. A village guy, whose dream is to become Police (and his dad's dream as well) and he achieves it as well. After getting a job he starts singing this:
பல்லவி:
வேப்பமரம், புளியமரம், ஆலமரம், அரசமரம்
ஊரவிட்டு போகப்போறேன் கேட்டுக்கோ,
ஆத்தங்கரை தெப்பக்குளம் குளிக்க வரும் செங்கமலம்
ஊரவிட்டு போகப்போறேன் கேட்டுக்கோ,
பஞ்சால சங்கு சத்தம் கேக்காத தூரம் போறேன்,
ஊரச்சுத்தும் குருவி பார்க்காத தூரம் போறேன்,
காக்கி சட்டை போட்டுகிட்டு,
போகப்போறேன் ஊரவிட்டு.
[Group]
காக்கி சட்டை போட்டுகிட்டு,
போகப்போறான் ஊரவிட்டு.
[End Group]
சரணம் 1:
சில்லுன்னு காலையில் எழுந்திரிச்சு; செலம்ப காத்துல சுழட்டுவேங்க,
சுத்தும் செலம்பு பட்டு கொஞ்சம் காயம் பட்டா நான் பொறந்த மண்ணெடுத்து பூசுவேணுங்க.
பல நாள் ஆச நெனவாச்சு, பெத்தவரு மனசு குளுந்தாச்சு,
புல்லட் வண்டி மேல ராக்கெட் வேகத்துல பந்தாவா சீறிகிட்டு போகப்போறேங்க.
[Group]
ஆறுசாமி பவனி சாலையில போனா பண்ணையாரு போடும் மேலு துண்டு எறங்கும்.
கலர், கலர் தாவணிய பார்த்துட்டா போதும்டா சாமியோட பவனி கைய கட்டி நிக்கும்டா...
[End Group]
சரணம் 2:
கள்ள நோட்டு அடிக்கறவன்; கந்து வட்டி வாங்கி சொரன்டுறவன்;
கோழி திருடறவன்; ஆட்ட அமுக்கறவன், ஆறு மாசம் டைமுக்குள்ள திருந்திக்கங்க.
வெப்பாட்டி வெச்சா ஒதப்பேங்க, பெத்தவள திட்டினா மிதிப்பேங்க,
கோலி கில்லி தண்டா ஆடும் பசங்க கண்டா, கூட்டத்தில் கொண்டாட்டமா சேந்துக்குவேங்க,
[Group]
குத்துர பம்பரத்த போல, தப்புன்னு தெரிஞ்சா தலயில குட்டுவான்
[End Group]
குட்டு பட்டா நீயும், குத்தம் உணந்துபுட்டா, சத்தியமா எனக்கு வேறொண்ணும் வேணாம்டா...