காதல்ல சொகம்கறதே…

இன்னைக்கு காதலர் தினம். காதலப்பத்தி எதாச்சும் எழுதலாம்னு நெனச்சு உக்காந்தேன். ஒன்னும் தோனல. அம்மணிக்கு போன் போட்டு 'எதாச்சும் சொல்லு புள்ளே'ன்னு கேட்டேன். அம்மணி பதில்: 'இங்க உம்பொண்ணு அழுகறத சமாதானப்படுத்தவே நேரம் இல்ல இதுல நீ கிறுக்கறதுக்கு நான் சொல்லிக்கொடுக்கணுமாக்கு. போடா ______ '

செரி, இலக்கியத்துலே எதாவது சுட்டு எழுதலாம்னு தேடி நளவெண்பால இத புடிச்சேன். மரபுக்கே உரித்தான அழகான உவமையோட நளன பிரிஞ்ச தமயந்தி சொல்லறது:

செப்பு இளம்கொங்கைமீர்!திங்கள்சுடர்பட்டுக்
கொப்புளம்கொண்ட குளிர்வானை - இப்பொழுது
மீன்பொதித்து நின்ற விசும்பு என்பதென் கொலோ
தேன் பொதிந்த வாயால் தெரிந்து.

விளக்கம்:

செப்பு மாதிரி கொங்கைகள் இருக்கற இளம்பெண்களே, என்னைச்சுடும் இந்த நிலாவின் வெப்பம் பட்டு வானம் முழுவதும் கொப்புளங்கள். இந்த கொப்புளங்களை வின்மீண்கள் என்று உங்கள் தேன் போன்ற வாயிலால் சொல்கின்றீர்களே, இது சரியா?

என்ன தான் சொல்லுங்க. என்ன கேட்டா, காதல்ல சொகம்கறதே இந்த மாதிரி பிரிஞ்சிருக்கறப்ப படற கஷ்டந்தான். என்ன சொல்லறீங்க?

0 comments: