காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு...

நம்ம மேட்டர் எல்லாம் ட்விட்டர்ல அப்டேட் பண்ணறதுனால ப்ளாக் பக்கம் வரதேயில்ல (வால்க டமிள்). நேத்தைக்கு "காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு" அங்க போஸ்ட் பண்ண போக நண்பு ஒருத்தன், நான் ப்ளாக்ல காணாம போயிட்டதா மெயில் அணுப்பிச்சுட்டான். அதுக்கெல்லாம் அசந்திடுவமா? இதோ வந்துட்டேன்னு சொல்லி ஒரு ப்ளாக் என்ட்ரி: (Ctrl+C, Ctrl+V  தான்)


பூப்போட்ட லுங்கி;கழுத்தில் கட்டம் போட்ட கர்சீப்;மொழங்கை வரை மடிச்சி விட்ட சட்டை;மெட்றாஸ் டமில்;பேட்டை ரவுடி-கபாலி #LostInTamilMovie

காட்டன் சேலை; ஒரு கைல குடையும்; ஒரு கைல பொட்டி; கூலிங்கிளாசு; கிராமத்துக்கு வரும் டீச்சரம்மா.பேரே டீச்சர் தான் #LostInTamilMovie

கண்ணாடி போட்டுட்டு,கொஞ்சம் கலரா,பணக்காரனா ஹீரோக்கு ஒரு பெரெண்ட்.நல்லவரோ கெட்டவரோ இது நம்ம சரத்பாபு தான் #LostInTamilMovie

35 வயசாகியும் கல்யாணம் ஆகாம இருக்கும் அக்கா, 25 வயசிலயே விதவையான ஒரு தங்கச்சி. இந்த கவலையோட டூயட் பாடும் ஹீரோ #LostInTamilMovie

இவங்களை எல்லாம் கண்டுபிடிச்சி தமிழ்த்திரைக்கு மீண்டும் தரப்போற புது டைரக்டர்களுக்கு பரிசா, Dr. விஜய் நடிச்சா எல்லா படங்களோட டீவீடீகளும் cam qualityல அனுப்பப்படும்.

Posted in | 0 comments