Jan 29

பெரிய அம்மணிய அட்ஜஸ்ட் பண்ணறது ஒன்னும் கஷ்டமான விசயம் இல்லைங்க. அவளுக்கு கோவம் வந்ததுன்னாம் “கோவப்படும் போது நீ ரொம்ம அழகா இருக்க தெரியுமா’ அப்படின்னு கத வுட்டு சமாளிச்சிடலாம். ஆனா இந்த சின்ன அம்மணி இருக்காளே, ரொம்ம கஷ்டம்ங்க. அவளுக்கு தோனுனத்தான் செய்வா. ஹூம். அவளக் கொஞ்சினாலும் செரி கெஞ்சினாலும் செரி, ஒன்னும் வேலைக்காகாது. செரி வளவளன்னு ஒளராம வெண்பாக்கு போலாம்.

கண்ணே கனியே அமுதேவென்(று) சொன்னாலும்
நெஞ்சில் குடுப்பாள் உதை

written by Prakash G.R.

Jan 04

குட்டி பாப்பா வந்ததில இருந்து கவித சும்மா அருவி மாதிரி கொட்டுது. ஆனா எழுதலாம்னு உக்காந்தா, இலக்கணம் அங்க அங்க முட்டுது. ரொம்ப யோசிச்சு நேத்து ராத்திரி ஒன்னு கிறுக்கினேன். இன்னும் ரெண்டு மூணு இருக்கு, நேரம் கிடைக்கும் போது தளை தட்டாம செரியா கிறுக்கி இங்க பதிக்குறேன்.

அவளைக்கொஞ் சும்போது என்மனதை அள்ளும்

நொடியில் மறையும் சிரிப்பு

written by Prakash G.R.

Nov 09

“ஒரு கல்லூரியின் கதை” படத்துல ரெண்டு மூணு பாட்டு நல்லா இருக்கும். எப்பவாச்சும் முனுமுனுத்துட்டு இருப்பேன். படம் பார்த்தது இல்ல. சமீபத்துல எதோ டீவீல போட்டாங்க. அம்மணி கூட உக்காந்து பார்த்துட்டு இருந்தேன். கதை என்னமோ கொஞ்சம் வித்தியாசமாத்தான் போச்சு. நடுவுல ஒரு இடத்துல, மனசுல காதல் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்க, ஹீரோயின் சத்தமே வராம உதட்ட மட்டும் அசைச்சு கூப்பிடுவாங்களாம், கூப்பிட்ட ஒடனே ரொம்ப தூரத்துல இருக்கற ஹீரோவும் கரெக்டா திரும்பி பார்ப்பாரு. எங்க அம்மணி: “நீயும் தான் இருக்கியே. லேப்டாப்ல எதயாச்சும் நோண்டிகிட்டு இருந்தா, அடுத்த ரூம்ல இருந்து காட்டு கத்து கத்துனாலும் காது கேக்காது. ஹூம். அதுக்கெல்லாம் மனசுல சுத்தமான காதல் வரணும்.”

யப்பா டைரக்டருங்களா, உங்களோட கற்பனை வளத்தை பாராட்டுறேன், ஆனா இதெல்லாம் கொஞ்சம் ஓவரு.

written by Prakash G.R.

Oct 13

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன், சொல்ல தடை விதித்தேன்,
நெஞ்சை நம்பி இருந்தேன் அது வஞ்சம் செய்தது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

ஓ, கன்னி மனம் பாவம் என்ன செய்ய கூடும்
உன்னைப்போல அல்ல உண்மை சொன்னது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

உனைத்தவிர எனக்கு விடியலுக்கோர் கிழக்கு, உலகினில் உள்ளதோ உயிரே
சூரிய விளக்கில் சுடர் விடும் கிழக்கு, கிழக்குக்கு நீ தான் உயிரே
எல்லாம் தெரிந்திருந்தும், என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

ஓ நங்கை உந்தன் நெஞ்சம், நான் குடுத்த லஞ்சம், வாங்கிக்கொண்டு இன்று உண்மை சொன்னது
சொன்னாலும், சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
விழிச்சிறையில் பிடித்தாய், விலகுதல் போல் நடித்தாய்
தினம் தினம் துவண்டேன் தளிரே
நதியென நான் நடந்தேன், அலை தடுத்தும் கடந்தேன், கடைசியில் கலந்தேன் கடலே
எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை
ஓ, பூவெடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு, வந்து விடும் மேலே வஞ்சிக்கொடியே
சொன்னாலும், சொன்னாலும் கேட்டிடாது கன்னி மனது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

written by Prakash G.R.

Oct 12

ஒரு மாசமா டைபாய்டுன்னு சாக்கு சொல்லி, வீட்டுல நல்லா தின்னுட்டு, தூங்கிட்டு இங்க வந்தா ஒரே கடி. இங்க தனியா வேற இருக்கேனா, சண்ட போட கூட ஆளே இல்லாம, நானே சமைச்சு, அத நானே சாப்பிட்டு, ஹூம். என்ன தான் திட்டும், அடியும் வாங்கினாலும், அம்மணி நெனப்பு வுட்டு போக மாட்டேங்குது. இந்த மாதிரி பிரிவில தான் நல்லா கவித வருமாமே. செரி ட்ரை பண்ணிப்பார்போமேன்னு ஒரு வெண்பா எழுதினேன்.

கவித, கவித எங்க படி:

தரையில் ஒருமீனாய் என்னைத் திணறவிட்ட(து)
எங்கள் இருவர் பிரிவு

written by Prakash G.R.

Oct 11

இங்க இருக்கற வரிகள் எல்லாம் நான் எங்க இருந்து சுட்டேன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்:

 

கோபம் கொள்ளும் நேரம்
வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா

கோபம் தீரும் நேரம்
மேகம் இல்லா வானம்
பெளர்னமியாய் தோன்றும் அதே நிலா


உலகத்தின் கடைசியாய்
இன்று தானோ என்பது போல்
பேசி பேசி தீர்த்த பின்னும்
எதோ ஒன்று குறையுதே.


உப்புக்கடலோடு மேகம் உற்பத்தியானாலும்
உப்புத்தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது
மலையில் விழுந்தாலும் சூரியன் மரித்து போவதில்லை
நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டித்துக்கொள்கிறதே,
மேகமாய் நானும் மாறேனோ
அதன் மேண்மை குணங்கள் காண்பேனோ
சூரியன் போலவே மாறேனோ
என் ஜோதியில் உலகை ஆளேனோ


காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் மறைவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள்மணம் மறப்பதில்லை

 

கருப்பு-வெள்ளை காலத்துல “அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா”-ன்னு அழகான வரிகளோட வ்ந்துகிட்டிருந்த தமிழ் சினிமா பாடல்கள் எங்கயோ போயி “எப்படி? எப்படி? நீ சமைஞ்சது எப்படி?”-ன்னு கேக்கற மாதிரி பாடல்களோட வர ஆரம்பிச்சிருச்சு. “இப்ப இருக்கற ஆளுகளே செரியில்லப்பா, எங்க காலத்துல எல்லாம்”-ன்னு ஆரம்பிக்கற பெரிசுகளுக்கு ஒரு இன்பர்மேசன்: மேல சொன்ன ரெண்டு பாடல்களையும் எழுதினது ஒரே ஆள் தான். அப்ப பார்க்கறவங்க தரம் கொறஞ்சு போச்சோ? நமீதாவோ இல்ல மும்தாஜோ வந்து ஒரு ஆட்டம் போட்டாதான் படம் ஓடுமோ? அப்படியும் இல்ல. தவமாய் தவமிருந்து கூட ஓடுதே. இந்த தமிழ் மக்களோட ரசனைய புரிஞ்சுக்கவே முடியலபா. என்னமோ போங்க.

ஸ்டேட்பாங்கில அக்கவுண்ட் இல்ல
டாஸ்மாக்கில கடன் வெச்சவன்

இந்த மாதிரி அட்டகாசமான பாட்டுகளுக்கு நடுவே நல்ல சில வரிகளும் எப்படியோ வந்துடுது. அப்படி நான் பார்த்த சில வரிகளத்தான் சுட்டு மேல குடுத்தேன். எந்தெந்த பாட்டுன்னு கேக்கறீங்களா?

    1. கண்ட நாள் முதலாய் - மேற்கே மேற்கே தான்
    2. வேட்டையாடு விளையாடு - மஞ்சள் வெய்யில் மாலை
    3. சாமுராய் - மூங்கில் காடுகளே
    4. 7ஜி ரெயின்போ காலனி - கண் பேசும் வார்த்தைகள்

முக்கியமா அந்த டாஸ்மாக் வரிகள் சொல்லாம விட்டுட்டானேன்னு திட்டுறவங்களுக்கு - ஆறு படத்தில “சோடா பாட்டில் கையில” பாட்டு 

written by Prakash G.R.

Aug 27

‘காக்க காக்க’ மாதிரி ஒரு படம் எடுக்கலாம்னு கமல் கெளதம் கிட்ட சொல்லி இருப்பார் போல. கெளதம் கஷ்டபடாம அந்த படத்தையே கொஞ்சம் அங்க இங்க மாத்தி remake பண்ணி இருக்கார். நேர்மையான போலீஸ் அதிகாரி, நீளமான தலைமுடிய விரிச்சுப் போட்டுட்டு ஒரு வில்லன், அவர் மனைவியை கடத்திட்டு போற கிளைமாக்ஸ், etc, etc.

படத்துல சொல்லும் படியான விசயங்கள்:

கமல்: சொல்லிக்கவே வேணாம். ஒரு கம்பீரமான போலீஸ் அதிகாரி எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கார் - கொஞ்சூண்டு தொப்பையும் சேத்திதான் சொல்லறேன் ;-)

கேமரா: சும்மா பூந்து விளையாடி இருக்கார் ரவிவர்மன்.

இசை: பின்னனி இசைல கொஞ்சம் கடிய போட்டாலும் பாட்டுல பட்டய கிளப்பிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ்.

காமெடி: ஒன்னு ரெண்டு இடத்துல அங்க அங்க டயலாக்ல தூவி விட்டிருக்கறது, ரசிக்கும் படியா இருக்கு. (”மணிரத்னம் படம் மாதிரி பேசறீங்க?”, “சாப்ட்வேரா? நானா?”, etc)

கோட்ட விட்ட மேட்டருக:

திரைக்கதை: இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணி இருக்கலாம். முக்கியமா, “காக்க காக்க” சாயல் இல்லாம பண்ணி இருக்கலாம். அப்புறம், மொத ரேங்க் வாங்கற டாக்டர் “சாகா வரம்” பத்தி பேசறது எல்லாம் லாஜிக்கே இல்லாத விசயம்.

வன்முறை: கொஞ்சம் ஓவருங்க. கழுத்த அறுத்தா ரத்தம் கொப்புளிச்சி வரும் தான். அத அப்படியே படத்துல காட்டணுமா?

இங்கிலீஸு: நியூயார்க்ல நடக்கற விசாரணை பூரா இங்கிலீஷ் வசனம் - தமிழ் சப்-டைடில். B, C  சென்டர்ல படம் பார்க்கறவங்களுக்காக அஞ்சு நிமிசத்துக்கு ஒரு தடவ கமல் இந்தியாக்கு போன்ல update பண்ணற மாதிரி தமிழ்ல கதை சொல்லறார். எடுபடுமான்னு தெரியல.

படம் பார்த்துட்டு வெளிய வந்த ரெண்டு பேர் பேச கேட்டது:

“கமல் இண்டியன் சினிமாவோட சிங்கம்டா. சும்மா சொல்லக்கூடாது படம் சுப்பர் இல்ல?”

“ஆமா மச்சி. அடுத்ததா உங்க தலைவரு காமெடி படம் தான எடுப்பாரு?”

written by Prakash G.R.

Aug 22

பெங்களூர் வலைப்பதிவர்கள் சந்திப்பு பத்தி இங்க எழுதி இருந்தேன். அதுல “என்னால ரொம்ப எல்லாம் தமிழ் பேச முடியாது” -ன்னு அறிமுகப்படுத்திகிட்ட பாரதியோட blog பக்கம் எட்டி பார்த்தேன். ஒரு நிமிசம் ஹார்ட் அட்டாக் வந்திடுச்சு. அசத்தலான குறள் வெண்பா எழுதி வெச்சிருக்காங்க. ரெண்டு சாம்பிள்:

கதவுதிறந் தோடிவந் தென்மழலை சொல்லும்
மொழியின் இனிதோ தமிழ்?

சோர்வாய் படித்து முடித்து உறங்கிடப்
போவோம் விடியும் பொழுது

இதைப்படிச்சதுக்கு அப்புறம் தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்னு கேக்கறீங்களா? தமிழுக்கு வந்த போதாத காலம், எனக்கும் குறள் வெண்பா எழுத ஆசை வந்திருச்சு. பாரதி போன ஜென்மத்துல நிறைய புண்ணியம் செஞ்சு இருக்காங்க. இல்லைன்னா என்ன மாதிரி சிஷ்யன் கிடைப்பாங்களா? ;-) கொஞ்சம் பொறுமையா பகுபத உறுப்பிலக்கணத்துல ஆரம்பிச்சு வெண்பா ரூல்ஸ் எல்லாம் சொல்லி கொடுத்தாங்க. நானும் ஏதோ கத்துகிட்டு தமிழை கொலை பண்ணப்போறேன். தமிழ் மேல அதீத பற்று இருக்கறவங்க தயவு செஞ்சு இதோட இந்த blog படிக்கறத நிறுத்திடுங்க. இதோ என்னோட மொத குறள்:

பதிவு எழுதியது போதாதென் றெண்ணி
எழுத நினைத்தேன் குறள்.

written by Prakash G.R.

Aug 14

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி சன் டீவி டாப் டென்ல இந்த படம் மொதல்ல வந்ததா நியாபகம். சரி நல்ல படம் போலன்னு சீடி எடுத்துட்டு வந்துட்டேன். குழந்தைகளுக்கு பிடிச்ச காரணத்துக்காகவும், குடும்பத்தோட பார்க்கக்கூடிய காரணத்துக்காகவும் தான் தியேட்டர்ல கூட்டம் வரதா பசங்க சொன்னாங்க. ஒண்ணு, ரெண்டு தவிர மத்தது எல்லாமே கொஞ்சம் கடியான காமெடி தான்.

“ஒன்பதுஎழுத்த்து” டைட்டில், ஏழை ஹீரோ, டமில் பேசற பணக்கார ஹீரோயின், மரத்த சுத்தி ஒரு ரெயின் சாங், அம்மா தாலி வெச்சு ஒரு சுப்பர் சென்டிமெண்ட், தொப்புள்ள பனியாரம் சுடுற சீன், ஓடுற ட்ரெயின் மேல கிளைமாக்ஸ் பைட், இத்யாதி, இத்யாதி - இந்த மாதிரி ஒரு “வெற்றிப்படத்துக்கு” அத்தியாவிசயமான சமாச்சாரம் எதுவும் இல்லாம, சுத்தமான தமிழ்ல ஒரு ராஜா காலத்து காமெடி கதை எடுக்கலாம்ன்னு யோசிச்ச டைரக்டர் சிம்புவிற்கு ஒரு பெரிய சபாஷ்.

இந்த மாதிரி ஒரு படத்துக்கு, அதுவும் ஒரு அறிமுக டைரக்டர நம்பி பணம் போட்டிருக்குற சங்கருக்கு இன்னொரு பெரிய சபாஷ். (அது ஏன் சார் உங்க படத்துக்கு மட்டும் வேற தயாரிப்பாளர் கிட்ட போறீங்க?)

அடுத்த சபாஷ், படத்தோட ஹீரோ (!) வடிவேலுவுக்கு. முந்தி எல்லாம் வடிவேலு காமெடின்னாலே செனல் மாத்திடுவேன். வீர வசனம் பேசிட்டு கோவை சரளாவை கூட்டிட்டு போயி கதவ சாத்தும் போதே தெரிஞ்சு போயிடும், நம்ம வீட்டு கத தான் நடக்க போகுதுன்னு. அத டீவீல வேற பார்க்கனுமான்னு, யோசிக்காம செனல் மாத்திடுவேன். அப்புறம், வின்னர் படம் வந்து தான் அவருக்கு ஒரு பிரேக் தந்துச்சு. சும்மா சொல்லக்கூடாது, டீவீல விடுங்க, அந்த சீன நெனச்சு பார்த்தாலே சிரிச்சுடுவேன். அப்படி ஒரு காமெடியன், படம் முழுக்க ஒரு சீரியஸ் ரோல்ல நடிச்சு பேர் வாங்கறது கொஞ்சம் கஷ்டம். அதை ஒரு அளவுக்காவது பண்ணியிருக்கார். அவருக்கு ஒரு சபாஷ்.

வழக்கம் போல தன்னோட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் நாசருக்கு இன்னோரு சபாஷ்.

கொஞ்சம் நாடகத்தனம், கொஞ்சம் கடி பாடல்கள், கொஞ்சம் வெறுப்பேத்தும் காமெடி, இதை எல்லாம் தள்ளி வெச்சுட்டு பார்த்தால், மொத்தத்துல ஒரு நல்ல டைம் பாஸ்.

written by Prakash G.R.

Jul 11

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்த்னை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
ஓஓஓஓஓஓ, கரு வாசல் தொட்டு வந்த நாள் தொட்டு
ஓஓஓஓஓஓ, ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஓஓஓஓஓஓ, கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஓஓஓஓஓஓ, கண் மூடிக்கொண்டால்
ஓஓஓஓஓஓ …

போர்களத்தில் பிறந்துவிட்டோம், வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம், முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கயிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும்
தீயோடு போகும் வரையில், தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து,கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
ஓஓஓஓஓஓ, அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஓஓஓஓஓஓ, இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஓஓஓஓஓஓ, மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
ஓஓஓஓஓஓ, அந்த கடவுளை கண்டால்
ஓஓஓஓஓஓ …

அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனிக்கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர்க்கணக்கு
உனக்குமில்லை இது எனக்குமில்லை, படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார், அட கெட்டவன் யார், கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே,பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை
நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
ஓஓஓஓஓஓ, பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, மறு பிறவி வேண்டுமா
ஓஓஓஓஓஓ …

written by Prakash G.R.